மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: சோனியா - சரத் பவார் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: சோனியா - சரத் பவார் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

புதுடெல்லி

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிவசேனா, பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதி களுக்கான சட்டப்பேரவைத் தேர் தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட் டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலை யில் இந்தக் கூட்டணிக்குப் பெரும் பான்மை இருக்கிறது. ஆனால் தனித்தனியாகப் பெரும்பான்மை இல்லை. இரு கட்சி களுக்கும் இடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, நேற்று மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

பின்னர் வெளியே வந்த சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறும் போது, “காங்கிரஸ் தலைவருடன் விரிவான ஆலோசனையை நடத்தினோம். மகாராஷ்டிராவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் அடுத்தகட்ட நட வடிக்கையை எடுப்பது தொடர் பாக விவாதித்தோம். மகாராஷ் டிர மாநில விஷயத்தில் காங் கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்துவது நல்லது. இதுதொடர்பாக சோனியா காந் தியை மீண்டும் சந்தித்துப் பேசு வேன்” என்றார். சரத் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மகாராஷ்டிரா வைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கள் சென்றிருந்தனர். முன்னதாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

ஆளுநருடன் சஞ்சய் சந்திப்பு

நேற்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் சந்தித்துப் பேசினார். பின்னர் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மகாராஷ்டிராவில் இப் போது நிலவும் குழப்பத்துக்கு நாங்கள் காரணமல்ல. மகாராஷ் டிராவில் யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கட்டும். ஆட்சி அமைவதில் சிவசேனா கட்சி தடையாக இருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in