Published : 04 Nov 2019 09:39 PM
Last Updated : 04 Nov 2019 09:39 PM

ஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது ஏன்?

16 நாடுகள் இணைந்த பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா சேரப்போவதில்லை என்ற முடிவை எட்டுவதற்கு சிலபல காரணங்கள் உள்ளன.

பாங்காக்கில் நடைபெற்ற ஆர்.சி.இ.பி உச்சி மாநாட்டில் இந்தியாவின் கவலைகள், பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை எட்ட முடியவில்லை, இதனையடுத்து இந்தியா அதில் சேரப்போவதில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாங்காக்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் இருப்பவை:

ஆர்சஇபி ஒப்பந்தத்தில் இந்தியா சேராததற்கு பல காரணங்களில் ஒன்று சீன பொருட்களுக்கு இந்தியச் சந்தையை திறந்து விட வேண்டாம் என்று இந்திய தொழிற்துறை மட்டுமே குரல் எழுப்பவில்லை, விவசாய அமைப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்த்து வந்தன.

அனைத்திந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற நாடு முழுதிலுமான 250 விவசாயச் சங்கங்களின் அமைப்பு பல வாரங்களாக இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தீவிரப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

மேலும் ஆர்.எஸ்.எஸ். இயத்தின் பொருளாதார கிளையான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பும் இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இணைய வேண்டாம் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி வந்தனர். இந்த ஒப்பந்தம் இந்திய தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு வணிகத்துறையை ஒழித்துக் கட்டி விடும் என்று இவர்கள் எச்சரித்திருந்தனர்.

தொடர் போராட்டங்களையும் மீறி இந்தியா இந்த உலகின் பெரிய சுதந்திர வாணிப ஒப்பந்த மாநாட்டில் கலந்து கொண்டது. ஆனால் அங்கு இந்தியா எழுப்பிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் தற்போது இந்தியா ஆர்.சி.இ.பி.இயில் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x