

59 பேர் உயிரிழப்புக்கு காரணமான தியேட்டர் தீ விபத்து வழக்கில் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.60 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் தியேட்டர் உரிமை யாளர்களும், தொழிலதிபர்களு மான சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோர் சிறைத் தண் டனையில் இருந்து தப்பியுள்ளனர்.
1993-ம் ஆண்டு டெல்லியில் உபகார் தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாய மடைந்தனர். தியேட்டர் நிர்வாகத் தின் கவனக்குறைவால் தீ ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் கைது செய்யப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகி யோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையை டெல்லி உயர் நீதி மன்றம் விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு குற்றத்தை உறுதி செய்தது. எனினும் நீதிபதிகள் இரு வரும் தண்டனை வழங்குவதில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித் ததால், 3 பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது. இப்போது இருவருக்கும் தலா ரூ.30 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வந்துள்ளது. இத்தொகையை அவர்கள் 3 மாதத்துக்குள் டெல்லி அரசிடம் செலுத்த வேண்டும். அத்தொகை நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும்.