

பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அந்த கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாபம் ஊழல், லலித்மோடி விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி, நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிலுவை யில் உள்ளன.
மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி நிறை வடைகிறது. அதற்குள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதா மக்கள வையில் ஏற்கெனவே நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
சமாஜ்வாதி ஆதரவு?
காங்கிரஸ் தலைமையிலான போராட்டத்தில் இருந்து சமாஜ் வாதி கட்சி விலகியுள்ளது. எனவே சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஜி.எஸ்.டி. மசோதாவை நிறை வேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒருபகுதியாக பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லலித் மோடி, வியாபம் விவகா ரங்களில் ஆளும் கட்சியுடன் மோதல் போக்கு நீடிப்பதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் தவறாமல் இரு அவைகளில் பங்கேற்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அந்த கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.