சல்மான் கான் மூளை இல்லாதவர்: ராஜ் தாக்கரே விமர்சனம்

சல்மான் கான் மூளை இல்லாதவர்: ராஜ் தாக்கரே விமர்சனம்
Updated on
1 min read

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கில் இடப்பட்ட யாகூப் மேம னுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் சல்மான் கான், பின்னர் அதனை திரும்பப் பெற்றார்.

இந்நிலையில் அவரை மூளை இல்லாதவர் என்று அவரது நீண்டகால நண்பரும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவருமான ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, தானே அருகே ராஜ்தாக்கரே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:

யாகூப் மேமன் ஒரு பயங்கரவாதி. ஆனால் அவரை தூக்கிலிடும் நிகழ்வு மத்திய, மாநில அரசுகளால் ஒரு நாடகமாக மாற்றப்பட்டுள்ளது. யாகூப் மேமன் பலரை கொன்று குவித்தவர். அவரை தூக்கில் இடுவதற்கு முன்னரும், பின்னரும் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, கலவரம் வெடிப்ப தையே மத்திய, மாநில அரசுகள் விரும்பு வதாக தோன்றியது.

மேமன் தூக்கில் இடப்படுவதற்கு முன் அவரைப் பற்றிய செய்திகளே ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. யாகூப் தூக்கில் இடப்பட்ட ஜூலை 30-ம் தேதி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. தேசியவாதியான அவரைப் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளில் அரிதாகவே காண முடிந்தது. மாறாக துரோகியின் புகைப்படங்கள் அதிக எண்ணிக்கை யில் இடம்பெற்றிருந்தன.

நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் மிகவும் மதிப்புக்கு ரியவர். ஆனால் சல்மான் கான் மூளை இல்லாதவர். அவருக்கு செய்தித்தாள்கள் படிக்கும் வழக்கம் இல்லை. அவருக்கு நாட்டின் சட்ட திட்டங்களும் தெரியாது. எனவேதான் யாகூப் மேமனுக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்தார். துரோகிக்கு கருணை காட்டவேண்டும் என்று சிலர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது எப்படி இவர்கள் கேள்வி எழுப்ப முடிகிறது?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆனதில் இருந்தே, மும்பையில் வசிக்கும் குஜராத்தியர்கள் கட்டுப் பாட்டை மீறி செயல்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எந்தப் பிரச்சினை குறித்தும் வாய் திறப்ப தில்லை. அறிவிப்புகளை மட்டுமே வெளி யிடுகிறார். மகாராஷ்டிரத்தில் புதிய தொழில் திட்டங்களை கொண்டு வரும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை பாராட் டுக்குரியது. ஆனால் இந்த தொழிற் சாலைகளில் மராட்டிய இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in