

புதுடெல்லி
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் வழக்கறிஞர்கள் இடையே நேற்று முன்தினம் பிற்பகல் மோதல் ஏற்பட்டது. இதில் 9 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 வழக்கறிஞர்கள் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை கோரி நீதிமன்ற வளாக வாயிலில் அமர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நேற்று வழக்கைப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. 2 மூத்த போலீஸ் அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.