Published : 03 Nov 2019 07:47 AM
Last Updated : 03 Nov 2019 07:47 AM
இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் அமைச் சரும், மூத்த காங்கிரஸ் தலைவர் களில் ஒருவருமான டி.கே.சிவகுமார் (57) கடந்த ஆகஸ்டில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். 50 நாட்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 23-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே டி.கே. சிவகுமார் ஜாமீனில் வெளியே வந்ததை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசியலில் செல்வாக்குள்ள டி.கே. சிவகுமாரை ஜாமீனில் வெளியில் அனுப்பினால், அவர் பணப் பரிவர்த்தனை வழக்கில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அழிக்கக்கூடும். எனவே, டி.கே.சிவகுமாருக்கு அளித்த நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில், பெங்களூரு திரும்பிய டி.கே.சிவகுமாரை காங்கிரஸ், மஜத மற்றும் கன்னட அமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேசி வந்தனர்.
நேற்று முன்தினம் அவருக்கு முதுகு வலியும் அதிக ரத்த அழுத்தமும் ஏற்பட் டது. இதனால் வீட்டிலேயே ஓய் வெடுத்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து டி.கே.சிவகுமாரின் குடும்பத்தார் உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள அப் பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதித்து சிகிச்சை அளித்து வருகின் றனர். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதும் காங்கிரஸ் பிர முகர்களும், டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்களும் மருத்துவமனை யின் முன்பு குவிந்தனர்.
இதனிடையே நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘டி.கே.சிவகுமாருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதால் நெஞ்சுவலி ஏற்பட்டுள் ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதால், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.