சாலை பள்ளம் பற்றி புகார் செய்தால் ரூ.500 பரிசு

சாலை பள்ளம் பற்றி புகார் செய்தால் ரூ.500 பரிசு
Updated on
1 min read

மும்பை

மும்பை நகர சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து புகார் செய்து, 24 மணி நேரத்தில் அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை என்றால் புகார்தாரருக்கு ரூ.500 வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் பருவமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி புதிய சவால் ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி சாலையில் 3 அங்குல ஆழம், ஒரு அடி நீளத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், செயலி வாயிலாக புகார் செய்யலாம். அந்தப் பள்ளங்கள் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். இந்த காலக்கெடுவுக்குள் பள்ளம் சீரமைக்கப்படாவிட்டால் புகார்தாரருக்கு ரூ.500 வழங்கப்படும். இந்த சவால் திட்டம் வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in