Published : 01 Nov 2019 08:04 AM
Last Updated : 01 Nov 2019 08:04 AM

கர்நாடக இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: முன்னாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டம்

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக அமர்த்தலாம் என நான் தெரிவித்தேன். அதற்கு காங் கிரஸில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், குமாரசாமி முதல் வராக பொறுப்பேற்றார்.

குமாரசாமி தலைமையில் 14 மாதங்கள் கூட்டணி ஆட்சி நடந்த நிலையில், சிலரின் சுயநலத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதில் காங்கிரஸுக்கும் பங்கு இருக் கிறது. அதே போல், கடந்த 2006-ல் குமாரசாமி ஆட்சியை பாஜகவினர் கவிழ்த்தனர். எங்களை முழுமையாக ஆள விடாமல் தடுத்ததில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே பங்கு இருக்கிறது. எனவே, இந்த இரண்டு கட்சிகளை யும் நாங்கள் நம்புவதில்லை.

காங்கிரஸ், பாஜக‌வுடன் மஜதவுக்கு எவ்வித‌ தொடர்பும் கிடையாது. இனி அந்தக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டோம். இரு கட்சிகளும் தேவைப்படும்போது எங்களை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அழிக்க முயற்சிப்பார்கள்.

எங்கள் கட்சியை அழிப்பதுதான் இரு கட்சிகளின் பிரதான நோக்கம். ஆதலால், வரும் இடைத்தேர்த லில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மாட்டோம். மஜத தனித்து போட்டி யிடும். நாங்கள் பாஜகவுடன் மென் மையான போக்கை கடைப்பிடிப்ப தாக கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x