காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம்: சீனா கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம்: சீனா கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி

காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த விவகாரம் தொடர்பாக சீனா கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங் களாக பிரிக்கும் மசோதாவை யும் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் நேற்று உதயமாகின.

இதனிடையே, புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகளை மறுவரையறை செய்யும்போது, சீனாவுக்கு உட்பட்ட பகுதிகளையும் இந்தியா சேர்த்துக் கொண்ட தாக அந்நாடு நேற்று குற்றம் சாட்டியது. மேலும், இந்த நடவடிக்கை, சீனாவின் இறை யாண்மைக்கு எதிரானது என் றும் அந்நாடு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டமும், அதன்படி இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதும் முழுக்க முழுக்க இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் ஆகும். இதில் சீனா உட்பட எந்த நாடும் கருத்து கூறுவதை ஏற்க முடியாது.

இந்த விவகாரத்துக்கும், சீனாவின் இறையாண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிர மிக்கும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

மற்ற நாடுகளின் உள் விவ காரத்தில் இந்தியா என்றும் தலையிடுவது இல்லை. அதையே மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியா எதிர்பார்க் கிறது. காஷ்மீரில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் பார்வையிட்டுச் சென்றதால், இந்த விவ காரம் சர்வதேச பிரச்சினை ஆகிவிடாது. இவ்வாறு ரவீஷ் குமார் தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in