

புதுடெல்லி
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.
இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்ஆப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும், யார் யார் போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சட்டீஸ்கரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியாவின் வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள புகாரில் தனது மொபைல் போன் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறியிருந்தார். மத்திய அரசும், வாட்ஸ்ஆப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.