Published : 31 Oct 2019 08:52 AM
Last Updated : 31 Oct 2019 08:52 AM

மேற்கு வங்க தொழிலாளர்கள் 6 பேர் சுட்டுக்கொலை: காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஸ்ரீநகர்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களை காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய் தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் முகாமிட்டுள்ள நிலையில், தீவிரவாதிகள் இந்த 6 தொழிலாளர்களையும் சுட்டுக் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணி அளவில் குல்காம் மாவட்டம், கட்ருஸ் பகுதியில் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து குல்காம் போலீஸ் துணை கமிஷனர் சவுகத் அஜிஸ் கூறும்போது, “கட்டிட வேலை மற்றும் தச்சுவேலைப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்" என்றார்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் கம்ருதீன், முர்ஸ்லீன் ஷேக், ரபிக் இல் ஷேக், ரபிக் ஷேக், சாதிக் உல் ஷேக், நயாம் உத்தீன் ஷேக் ஆகியோர் என அடையாளம் தெரிந்துள்ளது. இவர்கள் அனை வரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த வர்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு, காஷ்மீர் மாநிலத்துக்குள் வரும் வெளிமாநில மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இதுவரை காஷ்மீர் அல்லாத வெளிமாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்ததும் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர். ஆனால் தீவிரவாதி கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதி முழு வதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், பாது காப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காய மடைந்தனர். இதையடுத்து அப் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இதனிடையே கொல்லப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் குடும்பங்களுக் கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித் துள்ளார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

6 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீ ரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. சம்பவம் காரணமாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீர் பகுதி யில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.

மேலும் பறக்கும் பாதுகாப்பு படையும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. வாகனத் தணிக்கை யும் முக்கிய இடங்களில் நடை பெற்று வருகிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டு 87 நாட்கள் ஆன நிலையில் நேற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், சந்தைகள், பஸ்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x