

புதுடெல்லி
பின்தங்கியதாக கண்டறியப்பட்ட 30 மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்
திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ம் ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர் வளம், திறன் மேம் பாடு ஆகியவற்றின் அடிப்படை யில் நாட்டில் உள்ள மாவட்டங் களை நிதி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு தரவரிசைப்படுத் தியது. இதில், 117 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியவையாக அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து, அந்த மாவட்டங் களில் மேற்குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, அம்மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்த 117 மாவட்டங்களில் முதல்கட்டமாக, 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘பிரகதி' (மாநிலங்கள் வாரி யான குறைகேட்பு கூட்டம்) ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடை பெறும். பல்ராம்பூர், சோன்பத்ரா, சித்ரகுட் (உத்தரபிரதேசம்), ஷேக் பூரா, அவுரங்காபாத் (பிஹார்), கேரளாவின் வயநாடு, ஒடிசாவின் நவ்பாடா ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
- பிடிஐ