Published : 30 Oct 2019 11:52 AM
Last Updated : 30 Oct 2019 11:52 AM

காஷ்மீர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிக்சூடு  

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சுட்டனர்.

காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. டிரப்காம் என்ற இடத்தில் தேர்வு மையமாக செயல்பட்ட பள்ளி வளாகத்தில் சிஆர்பிஎப் வீரர்களும் போலீஸாரும் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் சிஆர்பிஎப் வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் 6 - 7 முறை சுட்டனர். என்றாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதில் எவரும் சிக்கவில்லை.

ஜரோப்பிய யூனியன் எம்.பி.க் கள் குழு நேற்று காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. தெற்கு காஷ்மீர் அனந்தநாக் மாவட் டத்தில் நேற்று முன்தினம் லாரி டிரைவர் ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் மற்றொரு சம்பவமாக, வடக்கு காஷ்மீர் சோப்போரில் பஸ் நிலையம் அருகே கையெறிகுண்டு வீசப்பட்டதில் 19 பேர் காய மடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x