

மால்டா
மேற்கு வங்கத்தில் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்துவிட்டு செங்கற்களைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மால்டா உத்தர் தொகுதியின் பாஜக எம்பி காகென் முர்மூவின் மகனுக்குத்தான் இந்த நிலை.
ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து இதை யாரும் எதிர்ப்பாத்திருக்க முடியாது எனினும் இதுகுறித்து மால்டாவிலுள்ள இங்கிலீஷ் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''நாடாளுமன்ற எம்பி காகென் முர்மூவின் மகன் ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போனுக்கு பதிலாக ஒரு பெட்டியில் செங்கற்களை நிரப்பி அனுப்பிவைத்திருக்கிறர்கள். செல்போன் பெறுவதற்காக அவர்கள் செலுத்தியுள்ள தொகை ரூ.11,999 ஆகும். இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இச்சம்பவம் குறித்து பிடியிடம் பேசிய எம்பி முர்மு கூறுகையில், என் மகன் ஆர்டர் செய்திருந்த பார்சலை வாங்குவதற்காக என் மனைவி ஒரு ரெட்மி 5 ஏ கைபேசியின் பெட்டியைப் பெற்றார். நான் அதைத் திறந்தபோது, சாம்சங் எம் 30 தொலைபேசிக்கு பதிலாக, அதில் இரண்டு கற்களைத்தான் காணமுடிந்தது. இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது. இது ஆர்டர் செய்த என் மகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
பிடிஐ