Published : 28 Oct 2019 06:00 PM
Last Updated : 28 Oct 2019 06:00 PM

தியாகிகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி: போபாலில் தேசப்பற்றுமிக்க தீபாவளி

போபால்,

நாடே இனிப்புகள் பறிமாறிக்கொண்டு பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது தியாகிகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி நேற்று தேசப்பற்று தீபாவளியை கொண்டாடியுள்ளனர் போபாலைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள்.

மத்திய பிரதேசம் போபாலில் கருணாதம் ஆசிரமம் புகழ்பெற்றது. இங்குள்ள மகாலட்சுமி கோவிலில் தீபாவளியை முன்னிட்டு ''எக் டீபக் ஷாஹிடோன் கே நாம்''என்ற விளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சி 'உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு ஒரு தீபம்' என்ற அர்த்தத்தில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மகாலட்சுமி கோயில் அர்ச்சகர் சுதேஷ் சாண்டில்யா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''நம்மால் என்ன செய்ய முடிந்தாலும், நம்மைவிட நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க தியாகம் செய்த வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இன்று, தீபாவளி பண்டிகை சந்தர்ப்பத்தில்கூட ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து விலகி, லட்சம் வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

நம் நாட்டின் விடுதலைப் போராளிகளைப் பற்றி இன்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் நம் நாட்டிற்காக இன்று எல்லையில் நின்று உயிர்த்தியாகம் செய்யவும் தயங்காத வீரர்களை நாம் மறந்துவிடுகிறோம்.

அவர்களின் தைரியமும் மற்றும் துணிச்சலுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் மிக உயர்ந்த கவுரவமான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டவர்களின் பங்களிப்புகள் குறித்து இன்னும் நிறைய பேருக்குத் தெரியாது. அவர்களை மதித்துப்
போற்ற வேண்டியது நமது கடமை.

பட்டாசுகளை வெடிக்கச் செய்வதற்கும், இனிப்புகள் விநியோகிப்பதற்கும் முன்பு மக்கள் வெளியே சென்று தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் தேவைப்படும் ஒருவருக்கு நாம் உதவும்போதுதான் உண்மையான தீபாவளி சிறப்படைகிறது.

இவ்வாறு கோயில் அர்ச்சகர் தெரிவித்தார்.

உயிரிழந்த ராணுவ ஜவான்களின் படங்களில் மாலைகளை அணிவித்திருப்பதைக் காண முடிந்தது. படங்களுக்கு முன் மக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு எதிரே மக்கள் தங்கள் கைகளில் ஆரத்தியை உயர்த்தி ஆராதனை செய்தனர். பின்னர் நடைபெற்ற பூஜை'க்குப் பிறகும் மக்கள், 'பாரத் மாதா கி ஜெய்' 'மற்றும்' 'வந்தே மாதரம்' 'என்ற முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x