

நாக்பூர்,
விவசாயிகள் அதிகம் தற்கொலைக்கு உள்ளான விதர்பா பகுதி கிராமப்புற மற்றும் மராத்வாடா பகுதிகளில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரபல விவசாய சங்க செயற்பாட்டாளரும் வி.என்.எஸ்.எஸ்.எம் வேளாண் துறை தலைவருமான கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த மகாராஷ்டிரா தேர்தல் வாக்கெடுப்புக்குப் பிறகு நடந்த பகுப்பாய்வின்படி, பாஜக கூட்டணிக் கட்சிகள் கிராமப்புற மையப்பகுதியில் 80 இடங்களில் 52 இடங்களைப் பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள மீதமுள்ள 28 இடங்களில் மோசமாக வீழ்ச்சியை சந்தித்தன, பல அமைச்சர்களை தோல்வியடைய வைத்தன என்று வசந்த்ராவ் நாயக் ஷெட்டி ஸ்வாலம்பன் மிஷன் (விஎன்எஸ்எஸ்எம்) தலைவர் கிஷோர் திவாரி கூறினார்.
இந்த நகர்ப்புற தொகுதிகளில் குறைந்தது ஐந்து அமைச்சர்கள், பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த இருவர் உள்ளனர், பார்லி (பீட்) பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அமைச்சர் பங்கஜா முண்டே, மோர்ஷி (அமராவதி) வேளாண் அமைச்சர் அனில் போண்டே மற்றும் பழங்குடியினர் சாகோலி (நாக்பூர்) இல் அமைச்சர் பரினாய் ஃபியூக். இவர்கள் அனைவரையுமே மக்கள் தோற்கடித்துள்ளனர்.
நகர்ப்புறத்தில் சேனாவிலிருந்து, தோற்கடிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்: பீட் நகரைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு அமைச்சர் ஜெய்துதா கிஷர்சாகர் மற்றும் ஜல்னாவைச் சேர்ந்த மாநில கூட்டுறவு விற்பனைத்துறை அமைச்சர் அர்ஜுன் கோட்கர் ஆவர்.
இதுகுறித்து வி.என்.எஸ்.எஸ்.எம் வேளாண் துறை தலைவர் கிஷோர் திவாரி ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் மகாராஷ்டிரா அரசு முனைப்புடன் செயல்பட்டது. அவ்வகையில் பாதிப்புக்குள்ளான 14 மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்வகையில் புதிய பயிர் கடன்களை வழங்க வசந்த்ராவ் நாயக் ஷெட்டி ஸ்வாலம்பன் மிஷன் (வி.என்.எஸ்.எஸ்.எம்) என்ற திட்டம் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது,
இந்த திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளிடம் மிகப்பெரிய பணிகளைச் செய்துள்ளது. இதனால்தான் பாஜக சிவசேனா கூட்டணிக்கு இந்தமுறை கிராமப்புறங்களிலிருந்து அதிக வாக்குகள் குவிந்துள்ளன.
குறிப்பாக தற்கொலை-பாதிக்கப்பட்ட 14 பின்தங்கிய மாவட்டங்களில், தங்கள் துன்பகரமான விவசாய நிலங்களில் மீண்டும் விவசாயப் பணிகளை உற்சாகமாக செயல்படுத்த விவசாயிகளை பாஜக அரசு ஊக்கப்படுத்தியது. இதுவே பாஜகவின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முதன்மைக் காரணம் ஆகும்.
நானும் எனது குழுவினரும் கிராமப்புற ஊரக பகுதிகளில், குக்கிராமங்கள் வரை சென்றோம். பல்வேறு கிராமப்புற நலத்திட்டங்கள், கடன்-தள்ளுபடி கொள்கை, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவை அனைத்து விவசாய மக்களுக்கும் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்தோம்.
பாஜக தனது முதல் பதவிக்காலத்தில் (மாநில அரசின் பதவிக்காலத்துடன் இணை-முனையம்), வி.என்.எஸ்.எஸ்.எம் வேளாண் துறை மற்றும் கிராமப்புற பொருளாதாரம் தொடர்பான மக்கள் பணிகளை தானாகவே தொடர்ந்தது, கூட்டணி அரசியலின் நிர்பந்தங்களால் ஏற்பட்ட பல அரசியல் மற்றும் அதிகாரத்துவ தடைகளை முறியடிப்பதில் வெற்றி பெற்றது.
இவற்றில் சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் புதிய விவசாயக் கடன்களை வழங்குவதை மக்களிடம் எடுத்துக் கூறுதல், சுகாதார திட்டங்களின் நன்மைகள், பண்ணை உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவதற்கான முயற்சிகள் செயல்படுத்துவதில், 6,000 கிராமங்களில் 'உங்கள் வீட்டு வாசலில் அரசு' போன்ற திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தை பொது நோக்குடையதாக உணர வைத்ததில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
இந்த முயற்சிகள் பாஜக - சேனா யவத்மலில் ஏழு இடங்களில் ஆறு இடங்கள், அகோலாவில் மூன்று இடங்கள், புல்தானாவில் நான்கு இடங்களில் இரண்டு, வாஷிமில் மூன்று மற்றும் வர்தாவில் நான்கு மூன்று இடங்களை பிடித்ததன் மூலம் வெற்றி வாய்ப்பு உறுதியானது. இது விவசாயிகள் மீதான உண்மையான அக்கறைக்காக பாஜக சிவசேனா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அதேநேரம் விவசாயிகளின் நலனைக் காட்டிலும் சுய நலன்களுக்காக உழைப்பதாக அவர்கள் உணர்ந்த வேட்பாளர்களை விவசாயிகள் நிராகரித்தனர். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், குறிப்பாக ஆளும் தரப்பினருக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
இவ்வாறு கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.