Published : 27 Oct 2019 08:49 AM
Last Updated : 27 Oct 2019 08:49 AM

ஹரியாணாவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக- ஜேஜேபி கூட்டணி அரசு இன்று பதவியேற்பு: மனோகர் லால் கட்டார் மீண்டும் முதல்வராகிறார்; துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி

சண்டிகர்

ஹரியாணாவில் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. இரண்டாவது முறையாக மனோ கர் லால் கட்டார் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற் கிறார்.

ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியிடப் பட்டன. ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

7 சுயேச்சைகள் ஆதரவு

ஆளும் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங் கிரஸுக்கு 31 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜன நாயக ஜனதா கட்சி 10 தொகுதி களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு தொகுதி கிடைத்தது. ஏழு தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளே, 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை, சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தனர்.

பாஜக-ஜேஜேபி கூட்டணி

இதனிடையே, 10 எம்எல்ஏக் களைக் கொண்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாஜக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அவர் அறிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதா லாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார். இதன்பின் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அமைச்சர் அமித் ஷா நிருபர்களிடம் கூறும்போது, "ஹரி யாணா மக்களின் தீர்ப்பை ஏற்று பாஜக-ஜேஜேபி கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் இணைந்து ஹரியாணாவில் ஆட்சி அமைக்கும். பாஜக மூத்த தலை வர் முதல்வராகவும் ஜேஜேபி மூத்த தலைவர் துணை முதல்வ ராகவும் பதவியேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக 40, ஜேஜேபி 10, சுயேச்சைகள் 7 என பாஜக கூட்டணியின் பலம் 57 ஆக உயர்ந்தது.

மனோகர் லால் கட்டார் தேர்வு

இந்நிலையில், புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக் களின் கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாகப் பங் கேற்றனர். இதில் பாஜக சட்டப் பேரவைத் தலைவராக மனோகர் லால் கட்டார் தேர்ந்தெடுக்கப்பட் டார். இதன்பிறகு அவர், ஆளுநர் சத்யதேவ் நரேனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். இதன்படி 2-வது முறையாக ஹரியாணா முதல் வராக மனோகர் லால் கட்டார் இன்று பதவியேற்கிறார். ஜன நாயக ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்கிறார்.

ஆளுநரை சந்தித்த பிறகு மனோகர் லால் கட்டார் நிருபர் களிடம் கூறும்போது, "ஞாயிற் றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நான் முதல்வராகவும் துஷ் யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற் கிறோம். சில அமைச்சர்களும் பதவியேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

துஷ்யந்த் தந்தைக்கு பரோல்

துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா ஆசிரி யர் பணி நியமன முறைகேடு வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ளார். மகனின் பதவியேற்பு விழாவில் பங் கேற்க அவருக்கு 14 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சண்டிகரில் இன்று நடை பெறும் புதிய அரசின் பதவியேற்பு விழா வில் அவர் பங்கேற்கிறார்.

ஹரியாணா லோகித் கட்சியின் தலைவரும் சிர்சா தொகுதி எம்எல்ஏவுமான கோபால் கண்டா பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார். ஆனால் அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது ஆதரவை ஏற்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறும் போது, "பாஜக பொது வாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் விரும்பும் கட்சி. கோபால் கண்டா வின் ஆதரவை பாஜக ஏற்க வில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x