Published : 25 Oct 2019 12:01 PM
Last Updated : 25 Oct 2019 12:01 PM

சேறும் சகதியுமான கிணற்றில் விழுந்த யானையை மீட்க 5 மணிநேரம் போராடிய வனத்துறை அதிகாரிகள்

சுதேர்கர் (ஒடிசா)

ஒடிசாவில் சேறும் தண்ணீருமாக கலந்திருந்த கிணற்றில் விழுந்த ஒரு யானையை கிராமவாசிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சுதேர்கர் மாவட்டத்தின் பட்கான் வன எல்லைக்குட்பட்ட பிர்தோலா கிராமம். புதன் கிழமை இரவு உணவு தேடி யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன.

திரும்பி வரும்போது, சேறும் தண்ணீரும் கலந்திருந்த ஒரு கிணற்ற்றுக்குள் ஒரு யானை மட்டும் விழுந்துவிட்டது. ஒரு இரவு முழுவதும் சேற்றுநீரிலேயே சிக்கிக் கொண்டிருந்த யானையை மறுநாள் காலையில்தான் கிராமவாசிகள் பார்த்துள்ளனர்.

சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த யானையைப் பார்த்த கிராமவாசிகள் பட்கானில் இருந்து வன அதிகாரிகளை அழைத்தனர், அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் நேற்று பிற்பகல் சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஆனால் யானையை மீட்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. சேறும் சகதியுமான கிணற்றில் இருந்து யானையை வெளியேற்ற ஐந்து மணி நேரம் ஆனது.

மீட்பு நடவடிக்கையின் வீடியோவில், யானை சேற்று கிணற்றிலிருந்து வெளியே வந்து அடர்ந்த காட்டுக்குள் நுழைந்ததும் கிராமவாசிகள் வன அதிகாரிகளை உற்சாகப்படுத்திக் கொண்டாடும் காட்சி வைரலாகி வருகிறது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x