

புதுடெல்லி
மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. எங்களுக்கு மீண்டும் ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறோம். இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்” என பதிவிட்டுள்ளார்.