Published : 24 Oct 2019 03:47 PM
Last Updated : 24 Oct 2019 03:47 PM

நாடுமுழுவதும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: வெற்றி நிலவரம்

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களுடன் துணை ராணுவத் தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றி மற்றும் முன்னணி நிலவரம்

* உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
* குஜராத்தில் 6 இடங்களில் 3ல் பாஜகவும், 3ல் காங்கிரஸும் முன்னிலை பெற்றுள்ளன.

* கேரளாவில் 5 தொகுதிகளில் 3 காங்கிரஸும், 2 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.

* பிஹாரில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் , ராஷ்ட்ரீய ஜனதாதளம் 3 தொகுதிகளிலும் சுயேச்சை ஒரிடத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

* அசாமில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும், ஓரிடத்தில் ஐக்கிய ஜனநாயக கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

* சிக்கிமில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 2 தொகுதிகளிலும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஒரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

* பஞ்சாபில் 4 தொகுதிகளில் 3ல் காங்கிரஸும், ஓரிடத்தில் அகாலிதளமும் வெற்றி பெற்றன.

*ராஜஸ்தானில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்திலும் ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி ஓரிடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

* இமாச்சல பிரதேசம் 2 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக வென்றுள்ளது.

* தமிழகத்தில் 2 தொகுதிகளிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

* ஒடிசா ஒரு தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதாதளம் வெற்றி பெற்றுள்ளது.

* தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமதி முன்னிலை வகிக்கிறது.

* மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தலா ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

* மேகாலயா ஐக்கிய ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது.

* புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

*அருணாச்சல பிரதேசம் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x