Published : 24 Oct 2019 10:46 AM
Last Updated : 24 Oct 2019 10:46 AM

தவறான வாக்குறுதிகளை தருவதாகக் கூறி 299 விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஏஎஸ்சிஐ

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

தவறான வாக்குறுதிகளை தருவ தாகக் கூறி, 299 விளம்பரங்களுக்கு இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏஎஸ்சிஐ) தடை விதித்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்து வதற்காக சமூக வலைதளம், அச்சு மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரம் செய் கின்றன. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இத்தகைய விளம் பரங்களில் கவர்ச்சிகரமான வாசகங்கள் மற்றும் வாக்குறுதிகள் இடம்பெறுவது வழக்கம்.

மேலும் விளம்பர தகவல்களை திரைப்படம், விளையாட்டு உள் ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங் கள் வாயிலாக கூற வைப்பதும் உண்டு. இதற்காக கோடிக்கணக் கான ரூபாய்களை செலவிடு கின்றன.

இந்நிலையில், இதுபோன்ற வர்த்தக விளம்பரங்கள் மீதான புகார்களை ஏஎஸ்சிஐ அமைப்பு ஆராய்ந்து, விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதவிர, தாமாக முன் வந்தும் விளம்பரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வரு கிறது. அந்த வகையில், தவறான வாக்குறுதிகளை வழங்கியதாகக் கூறி 299 விளம்பரங்களை வெளியிட ஏஎஸ்சிஐ தடை விதித்துள்ளது.

இதில், ‘தங்கள் மாத்திரையை சாப்பிட்டால் 100 நாட்களில் நீரிழிவு நோய் குணமாகும்’ என்ற வாசகங்களுடன் வெளியாகி வந்த ஒரு பெருநிறுவனத்தின் விளம்பர மும் இடம் பெற்றுள்ளது. இந்த மாத்திரைகள் உண்மையிலேயே நூறு நாட்களில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதில்லை என ஏஎஸ்சிஐ செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாலிவுட் பிரபல இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியின் ‘மலால்’ திரைப்படத்தின் விளம்பரம் வெளி யானது. அதில், நாயகனும், நாயகியும் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சியில் தலைக்கவசம் அணியவில்லை. இந்தக் காட்சி மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்தை மீறுவது போல் இருப்ப தாகக் கூறி, இந்த விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில், பழம் பெரும் நிறுவனத்தின் முக்கிய ஊட்டச்சத்து பொருள் விளம்பரத் துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் அந்த ஊட்டச் சத்து பொருளை அருந்தினால் களைப்பு உடனடியாக நீங்கிவிடும் என தவறாகக் கூறுவதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைவு மட்டும் களைப்புக்கு காரணம் அல்ல எனவும் அதற்கு உடலில் ஏற்படும் வேறு சில குறை பாடுகளும் காரணமாக இருக்கலாம் என்றும் ஏஎஸ்சிஐ கூறியுள்ளது.

ஒரு நிறுவனம் தங்களுடைய ஏசியை இயக்கிய 45 விநாடிகளில் 18 டிகிரி செல்சியஸுக்கு அறை குளிர்ந்து விடும் என விளம்பரம் செய்தது. இது தவறு எனக் கூறி அந்த விளம்பரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சில பிரபல நிறுவனங்கள் தயாரிக் கும் ஊட்டச்சத்து பானங்கள், பவுடர்கள் ஆகியவற்றின் விளம் பரங்களும் தவறான உறுதிமொழி களை அளிப்பதாகக் கூறி அவற்றை வெளியிடத் தடை விதிக்கப்பட் டுள்ளது.

இந்த வரிசையில் புதிதாக ஒரு தனியார் கல்வி நிறுவனமும் சிக்கி உள்ளது. இது தங்கள் நிறுவனத்தில் பயின்றால் தலைமைக்கான முழு தகுதியும் பெறலாம் என விளம்பரம் செய்கிறது. இது மாணவர்களை திசை திருப்பும் தவறான வாக்குறுதி எனக் கூறி இந்த விளம்பரத்துக்கும் ஏஎஸ்சிஐ தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x