Published : 24 Oct 2019 10:35 AM
Last Updated : 24 Oct 2019 10:35 AM

இடைத் தேர்தல் நிலவரம்: உ.பி.யில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை

லக்னோ

உத்தர பிரதேச மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 11 சட்டப்பேரவைத தொகுதிகளில் பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி 2 இடங்களிலும், பகுஜன்சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா ஓரிடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகள், குஜ ராத்தில் 6, கேரளாவில் 5, பிஹாரில் 5, சிக்கிமில் 3, பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமிழகம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 11 சட்டப்பேரவைத தொகுதிகளில் பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி 2 இடங்களிலும், பகுஜன்சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா ஓரிடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x