Published : 23 Oct 2019 19:21 pm

Updated : 23 Oct 2019 19:21 pm

 

Published : 23 Oct 2019 07:21 PM
Last Updated : 23 Oct 2019 07:21 PM

காஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன் இந்திய நிருபர் குற்றச்சாட்டு

pakistan-sponsored-terrorism-ignored-by-world-press-indian-journalist-testifies-before-u-s-committee
ஸ்ரீநகரில் இந்திய ராணுவ வீரர்கள். | ஏ.எப்.பி.

வாஷிங்டன், பிடிஐ

காஷ்மீரில் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த அமெரிக்கக் கமிட்டி முன் பேசிய இந்திய நிருபர் ஆர்த்தி திகூ சிங் 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீரில் நிகழ்த்தப்படும் தீவிரவாதச் சம்பவங்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்று கறாராகக் கூற அதற்கு கடும் எதிர்வினை எழுந்தது.

அமெரிக்க காங்கிரஸ் அழைப்பின் பேரில் அமெரிக்காப் பறந்த ஆர்த்தி திகூ சிங், அமெரிக்க உறுப்பினர் இல்ஹன் உமர் என்பவரது விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “காஷ்மீர் விவகாரம் குறித்த அமெரிக்க கமிட்டியின் விசாரணை முன் தீர்ப்பு கொண்டது, பாரபட்சமானது, பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதோடு இந்தியாவுக்கு எதிரானது” என்று சாடினார்.

“கடந்த 30 ஆண்டுகால காஷ்மீர் சூழலில் இஸ்மாமிக் ஜிஹாத் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள் உலக ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேச மனித உரிமை ஆர்வலர்கள் இல்லை. இதைப்பற்றி பேசும் தார்மிகப் பொறுப்பு கூட பன்னாட்டு ஊடகங்களுக்கும் இல்லை, இது நியாயமற்றது” என்று திகூ சிங் கடுமையாகச் சாடினார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் 2 முஸ்லிம் உறுப்பினர்களுள் ஒருவரான இல்ஹன் உமர், இந்திய நிருபர் ஆர்த்தி மீது விமர்சனம் வைத்த போது, விவகாரத்தின் அதிகாரபூர்வ, அரசுத் தரப்பு விஷயத்தைப் பேசுகிறார் திகூ சிங், அவரது பத்திரிகை உலகக் கரியர் மீதான ஆசைகள் அவரைப் பேச விடுவதில்லை என்று விமர்சித்தார்.

பிறகு நேரடியாகவே ஆர்த்தியை நோக்கி, ஒரு நிருபரின் வேலை என்னவெனில் நடப்பு பற்றி உண்மையை தன்னலமின்றி வெளியிடுவதே, "உங்களுக்கு பெரிய அளவில் வாசகர்கள் இருக்கிறார்கள். எனவே சரியானவற்றை எழுதுவதில் உங்களுக்கு பெரிய அளவில் பொறுப்பு உள்ளது. செய்தியை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்படும் கதையாடல்கள் எப்படி உண்மையை திரிக்கின்றன என்பதை நான் அறிவேன். அதிகாரபூர்வ, அரசுதரப்பு வாதங்களை மட்டும் பகிர்வதாக செய்திகள் வரம்புக்குட்படுத்தப்படுவதையும் நான் அறிவேன். அரசின் ஒலிபெருக்கியாக பிரஸ் மாறுவது என்பது மிக மோசமான ஒன்று.

நீங்கள் கூட நம்புவதற்கு இடமளிக்காத வகையில் காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை மனித உரிமைகளுக்கு நல்லது என்று கூறுகிறீர்கள். ஆகவே திரு. சிங் அவர்களே அது மனித உரிமைகளுக்கு நல்லது என்றால் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும்” என்று இல்ஹன் உமர் பதில் கேள்வி எழுப்பிச் சாடினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Pakistan-sponsored terrorism ignored by world press: Indian journalist testifies before U.S. committeeகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன் இந்திய நிருபர் குற்றச்சாட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author