Published : 23 Oct 2019 11:01 AM
Last Updated : 23 Oct 2019 11:01 AM

உத்தரபிரதேச இடைத்தேர்தல் பணிக்காக இளஞ்சிவப்பு நிற சேலையில் வந்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரீனா துவிவேதி. இவர் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக உள்ளார். தேர்தல் நேரங்களில் இவர் தேர்தல் பணியாற்றச் செல்லும்போது மஞ்சள் நிற சேலையை அணிந்து செல்வது வழக்கம். இதுதொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் லக்னோ கண்டோன்மெண்ட் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரிலுள்ள மகாநகர் கல்லூரியில் ரீனாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நாளன்று வழக்கமாக மஞ்சள் நிற சேலையில் வரும் ரீனா, இம்முறை இளஞ்சிவப்பு (பிங்க்) நிற சேலையில் வந்தார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அவர் பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. இதுகுறித்து ரீனா துவிவேதி கூறும்போது, “எனக்கு தற்போது 32 வயதாகிறது.

எனக்கு இளமையிலேயே திருமணமாகி விட்டது. எனக்கு மகன் உள்ளார். இது வழக்கமாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் எடுத்த புகைப்படம்தான். அது வைரலாகி விட்டது. அதேசமயம், நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” என்றார். இவருக்கு 15 வயதில் மகன் உள்ளான். 2013-ல் இவரது கணவர் காலமானதையடுத்து பொதுப்பணித் துறையில் இவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x