

முசாபர்நகர், உ.பி., பிடிஐ
மின்சார நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தாத விவசாயிகள் மீது உத்தரப் பிரதேச அரசு வழ்க்கு தொடர்ந்துள்ளதையடுத்து பாரதிய கிசான் சங்கம் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சங்களை முன் வைத்துள்ளது.
விவசாயிகளிடத்தில் இன்று பேசிய பாரதிய கிசான் சங்கத் தலைவர் நரேஷ் திகைட் என்பவர், மாநிலத்தின் மின்சாரத் துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது செலுத்தும் அராஜத்தை அமைப்பு பொறுத்துக் கொள்ளாது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய உரிய தொகையை இன்னும் கொடுக்கவில்லை அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை, இந்நிலையில் மின் கட்டண நிலுவைகளுக்காக விவசாயிகள் மீது வழக்கு தொடர்வதா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைக் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பாரதிய கிசான் சங்கம் மாநில அரசுக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும் போது, “அரசு விவசாயிகளின் பிரச்சினைகளுகு உணர்வுப்பூர்வமாக இருப்பதில்லை. புதிய சீசன் தொடங்கியுள்ள நிலையில் சர்க்கரை ஆலைகள் இன்னமும் பழைய நிலுவைத் தொகைகளையே விவசாயிகளுக்கு வழங்கவில்லை இந்நிலையில் வழக்கு தொடர்வதா? என்று சாடியுள்ளார்.