Published : 22 Oct 2019 11:49 AM
Last Updated : 22 Oct 2019 11:49 AM

அமித் ஷாவுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 55-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துக் குறிப்பில், "அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ஓர் அனுபவம் மிக்க திறமைவாய்ந்த தலைவர்.

அமைச்சரவையில் எனது சகாவான அமித் ஷா, அரசாங்கத்தில் மிக முக்கியமான பங்குவகிப்பதுடன் இந்தியாவைப் பாதுகாப்பதில் வலுவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் நல்கட்டும்" எனப் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா 1964-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவர் இளமைக்காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் படிப்படியாக வளர்ச்சி கண்டார்.

பின்னர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். சமகால அரசியலின் சாணக்கியர் என்றழைக்கப்படும் அமித் ஷா பாஜகவின் தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால் நிற்கும் மிகப்பெரிய சக்தியாகவே பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றி சாத்தியமானதற்கு அமித் ஷாவின் வியூகங்களே காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியனவற்றால் 2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு கைநழுவிப் போகும் என விமர்சிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வியூகங்களால் மீண்டும் பாஜகவுக்கு வெற்றியை சாத்தியமாக்கி மோடியை 2-வது முறையாகப் பிரதமராக அமரவைத்திருக்கிறார் அமித்ஷா.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x