

புதுடெல்லி
போலீஸாருக்கு சிறந்த பணிச்சூழல் மற்றும் உடல்நலனை காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத் தில் அமைச்சர் அமித் ஷா நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் மத்தியில் அவர் பேசும்போது, “உலகில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா பீடு நடை போடுகிறது. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் தேசியப் பணியாற்றும் சீருடை பணியாளர்களே காரணம்.
நாட்டில் 1 லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 114 பேர் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட போலீ ஸார் தினமும் 12 மணி நேரத்துக் கும் மேலாக பணியாற்றுகின்றனர். நான்கில் மூன்று பகுதியினர் வாராந் திர விடுமுறைகூட எடுப்பதில்லை.
போலீஸாரின் நலனுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. போலீஸாரின் உடல்நலம், வீட்டு வசதி, குடும்பத்தினர் நலன், சிறந்த பணிச்சூழல் என மேலும் பல திட்டங்களை குறிப்பிட்ட காலவரம்புக்குள் செயல்படுத்துவோம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுதப் போலீஸ் படையின் பாரம் பரிய அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய காவலர் நினைவிடத்துக் கான புதிய இணையதளத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
கடந்த 1959, அக்டோபர் 21-ம் தேதி லடாக்கில் சீனப் படையினரின் திடீர் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் தேசிய காவலர் தினமாக ஒவ் வொரு ஆண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
டெல்லி சாணக்யபுரியில் புதிய அருங்காட்சியகத்துடன் புனரமைக் கப்பட்ட தேசிய காவலர் நினை விடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு காவலர் நினைவு தினத்தில் திறந்து வைத்தார்.
30 அடி உயரம் மற்றும் 238 டன் எடை கொண்ட கிரானைட் கல் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
பிரதமர் அஞ்சலி
தேசிய காவலர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “காவலர் நினைவு தினத்தில் பணி யின்போது உயிர் தியாகம் செய்த துணிச்சல் மிக்க போலீஸாரை பெரு மிதத்துடன் நினைத்துப் பார்க் கிறேன். தளரா ஊக்கத்துடன் போலீ ஸார் தங்கள் பணியை செய்து வரு கின்றனர். அவர்களின் துணிச்சல் நம்மை எப்போதும் ஊக்குவிப்ப தாக உள்ளது” என்று கூறியுள்ளார்.