

லடாக்
உலகின் மிக உயரமான போர்க்கள மான சியாச்சின், சுற்றுலாப் பயணி களுக்காக திறக்கப்படுகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் அறிவிக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் ராணுவம் சார்ந்த இடங்களை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக காஷ் மீரின் லடாக் பகுதியில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காக திறக் கப்பட்டுள்ளது. இந்த பனிச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 18,875 அடி உயரத்தில் உள்ளது. இது உலகின் மிக உயரமான போர்க்கள மாகும்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக லடாக் பகுதியில் பாயும் ஷயோக் நதியில் பாலம் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் லடாக் பகுதியும் ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இங்கு அடிப்படை கட் டமைப்பு வசதிகள் மேம்படுத் தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஷயோக் நதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. சியாச்சின் பகுதி சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படுகிறது. சியாச்சின் அடிவார முகாமில் இருந்து குமார் போஸ்ட் வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.