Published : 22 Oct 2019 08:47 AM
Last Updated : 22 Oct 2019 08:47 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: மகாராஷ்டிரா 63%, ஹரியாணா 62 % - சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வர்; 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மும்பை/சண்டிகர்

மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் விறுவிறுப் பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 63 சதவீதமும், ஹரியாணாவில் 62 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தினார்.

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் 288 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 235 பெண்கள் உட்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.9 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 96,661 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன.

மகாராஷ்டிராவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6.5 லட்சம் தேர்தல் அலுவலர்களும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்புப் படை வீரர்களும் பணியில் ஈடுபட்டனர்.

கடும் போட்டி

மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜன நாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசிய வாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

ஹரியாணாவில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,169 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 105 பேர் பெண்கள். மாநிலத் தில் 1.83 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக் காக 16,357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தள மும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதி களில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

2 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் 17 மாநிலங்களைச் சேர்ந்த 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது. பிஹாரின் சமஸ்திபூர் மக்கள வைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதி களுக்கு நேற்று இடைத்தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகள், குஜராத்தில் 6, கேரளாவில் 5, பிஹாரில் 5, சிக்கி மில் 3, பஞ்சாப், அசாம் மாநிலங் களில் தலா 4, தமிழகம், ராஜஸ் தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மேற்கு நாக்பூர் தொகுதியிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரது மனைவி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் நாக்பூர் தொகுதி யில் வாக்களித்தனர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பையிலும், நடிகர் அமீர் கான், அவரது மனைவி கிரண் ராவ், மூத்த நடிகை ஷோபா கோட்டே உள்ளிட்டோரும் மும்பையில் வாக்களித்தனர். பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நடிகர், நடிகைகள்

நடிகைகள் ஹேமமாலினி, தீபிகா படுகோன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா, நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், ரித்தேஷ் தேஷ்முக், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன் உள்ளிட்டோர் மும்பையின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

சைக்கிளில் வந்த கட்டார்

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக் கிளில் வந்து வாக்கினைப் பதிவு செய்தார். முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட் டோரும் தங்களது வாக்குககளைப் பதிவு செய்தனர்.

ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களிலும் கல்வீச்சு போன்ற சிறு சம்பவங்களைத் தவிர வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. அதேபோல இடைத்தேர்தல் நடைபெற்ற 2 மக்களவைத் தொகுதிகள், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மகாராஷ்டிராவில் 63 சதவீதமும், ஹரியாணாவில் 62 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

24-ல் வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந் திரங்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் உறையிட்டு ‘சீல்’ வைத்தனர். பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப் பட்ட வாக்கு எண்ணிக்கை மையங் களுக்குக் கொண்டு செல்லப் பட்டன. அங்கு அறையில் வைக்கப்பட்டு அந்த அறைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. -

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x