Published : 20 Oct 2019 04:50 PM
Last Updated : 20 Oct 2019 04:50 PM

மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

மும்பை

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை (அக்டோபர் 21) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத் தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு சட்டப் பேரவைத் தேர்தலை ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட் டணி அமைத்து சந்திக்கின்றன. அதே போல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், தேசியவாத காங் கிரஸும் கைகோர்த்து, இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தத் தேர்தலில் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஹைதராபாத் எம்.பி. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகளும் போட்டி யிடுகின்றன. இந்தக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பிரதமர் நரேந் திர மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர் களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பட்டு வருகின்றன. அதுபோலவே வாக்குப்பதிவு அமைதியுடன் நடைபெற ஏதுவாக அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார் அனுப்பட்டு வருகின்றனர்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x