Published : 20 Oct 2019 07:34 AM
Last Updated : 20 Oct 2019 07:34 AM

விறுவிறுப்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; மகாராஷ்டிரா, ஹரியாணாவில் நாளை வாக்குப்பதிவு- பலத்த போலீஸ் பாதுகாப்பு; ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் கண்காணிப்பு

மும்பை/சண்டிகர்

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை யுடன் ஓய்ந்தது. நாளை நடக்கும் வாக்குப்பதிவுக்காக பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை (அக்டோபர் 21) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத் தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு சட்டப் பேரவைத் தேர்தலை ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட் டணி அமைத்து சந்திக்கின்றன. அதே போல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், தேசியவாத காங் கிரஸும் கைகோர்த்து, இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தத் தேர்தலில் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஹைதராபாத் எம்.பி. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகளும் போட்டி யிடுகின்றன. இந்தக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

மகாராஷ்டிராவில் பாஜக 164 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் களம் காண்கிறது.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) 101 இடங்களில் வேட் பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங் களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் போட்டியிடுகின் றன. தனித்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 262 இடங்களில் தனது வேட்பாளர்களை களமிறக்கி யுள்ளது. இதுதவிர 1,400 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள் ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

தேர்தலையொட்டி 6.5 லட்சம் வாக்குச்சாவடி பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இதற்காக 96,661 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் 1,35,021 விவிபாட் இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

2014 தேர்தலில் மொத்தம் 288 தொகுதிகளில் பாஜக 122 இடங் களிலும், சிவசேனா 63 இடங்களி லும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங் களிலும் வெற்றி கண்டது.

இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பிரதமர் நரேந் திர மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மகா ராஷ்டிராவில் மட்டும் பிரதமர் மோடி 9 பொதுக் கூட்டங்களில் பேசினார். ராகுல் காந்தி 6 இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர் களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

கடைசி நாள் பிரச்சாரத்தின் போது மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா கட்சியின் இளம் தலைவர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மும்பையின் வொர்லி, நாக்பூர் தென் மேற்கு தொகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வட மகாராஷ்டிரா பகுதியில் பிரச்சாரம் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.

இடைத்தேர்தல்

ஹரியாணா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுடன் பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும், 2 மக்களவைத் தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது.

பிஹாரில் சமஸ்திபூர் மக்கள வைத் தொகுதிக்கும், மகாராஷ்டிரா வில் சடாரா மக்களவைத் தொகு திக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகள், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமி ழகம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேகா லயா, புதுச்சேரி, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

பிரச்சாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து நாளை (21-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத் தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 24-ம் தேதி வாக்கு கள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவு களும் அறிவிக்கப்படவுள்ளன.

பலத்த பாதுகாப்பு

தேர்தலையொட்டி மகாராஷ் டிரா, ஹரியாணாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் அதிக பதற் றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப் பட்டுள்ளனர்.

நக்சல் பாதிப்புள்ள கட்சிரோலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் போலீஸார் களமிறக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 ஹெலிகாப்டர்களும், ஆளில்லாத உளவு விமானங்களும் பணியில் ஈடுபட்டுள்ளன.

3 லட்சம் போலீஸார்

தேர்தலையொட்டி 2 லட்சம் மாநில போலீஸாரும், சிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ், நாகாலாந்து பெண் போலீஸ் படை களைச் சேர்ந்த ஒரு லட்சம் போலீ ஸார் என மொத்தம் 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர்.

75 ஆயிரம் பேர்

ஹரியாணாவில் 75 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி மனோஜ் யாதவா தெரிவித்தார்.

ஹரியாணா மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “பதற்றமான, அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸாரும், பாதுகாப்புப் படை யினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப் படுவர். வாக்குப்பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி

இதேபோல், தமிழகத்தில் காலி யாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந் தது. நாளை காலை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக இடையேயும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த 2 தொகுதி களிலும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனல் பறக்கும் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக சார்பில் அமைச்சர் கள், திமுக சார்பில் முன் னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் 2 தொகுதிகளிலும் முகாமிட்டு களப்பணியாற்றி வந் தனர். இந்நிலையில், நேற்று பிரச் சாரத்துக்கு கடைசி நாள் என்பதால் பிரதான கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வேட் பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x