

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
இந்திய ராணுவத்திற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வரவுள்ளன. இதில் முதல் விமானத்தை பெற்று கொள்ள பிரான்ஸ் சென்ற அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்கு ரபேலுக்கு பொட்டு வைத்து, சக்கரங்களில் எலுமிச்சை பழங்களை நசுக்கி, மேற்புறம் ‘ஓம்’ என்று எழுதி இந்து முறைப்படி பூஜை செய்தது சர்ச்சையாகி உள்ளது.
இந்திய ராணுவத்தில் மதரீதி யான சடங்குகள் சட்டப்படி அனு மதிக்கப்படுவதில்லை. எனினும், அதிகாரிகள் அனுமதியின் பேரில் மதச்சடங்குகள் செய்யப்படுவது புதிதல்ல. ஆங்கிலேயர் காலத்தில் கொள்கை அளவில் அறிமுகமான இந்த வழக்கம் மத நல்லிணக்கத் திற்கு சிறந்த உதாரணமாகவும் உள்ளது. இதன் தற்போதைய நிலையை ‘இந்துதமிழ்’ நாளேட் டிடம் ராணுவ வட்டாரம் கூறும் தக வல்கள் வியக்க வைக்கின்றன.
இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவுகளாக இருப்பவை இன் பேன்ட்ரி பட்டாலியன்கள், ஆர்டிலரி மற்றும் ஆர்மர்ட் ரெஜிமெண்டுகள். இவற்றின் உட்பிரிவுகள் சீக்கியர், ஜாட், மதராஸ், அசாம், குர்கா, நாகா, குமாவ்ன், கடுவால், ராஜ்புத், டோக்ரா, கிரனைடியர்ஸ், மிக்ஸ்சிடு எனப் பல பெயர்களில் உள்ளன. சிலவற்றில் குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இடம்பெறுவது உண்டு.
இந்த ரெஜிமெண்ட் மற்றும் பட்டாலியன்களின் ‘யூனிட்’ எனப்படும் முகாம்களில் மதச்சடங்கு களுக்காக ஆங்கிலேயர் காலத்தில் ஒரு கொள்கை வகுக்கப்பட்டுள் ளது. இதன்படி, யூனிட்டுகளில் எந்த மதத்தினர் அதிகமாக இடம் பெற் றுள்ளார்களோ அவர்களின் மதச் சடங்குகள் செய்ய அனுமதி உண்டு. அனைத்து மதத்தினரும் இடம்பெற் றுள்ள யூனிட்டுகளில் அனைத்து மதச்சடங்குகளும் செய்யலாம். இதே கொள்கை இன்றும் கடைப் பிடிக்கப்படுவதாக தெரிகிறது.
வீரர்களின் வழிபாடுகளுக்காக ஒவ்வொரு யூனிட்டிலும் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை பொதுப் பெயரில் ‘சர்வ சமயஸ்தல்’ என அழைக்கின்றனர்.
இதன் பொறுப்பாளராக மதச் சடங்குகள் அறிந்த பூசாரிகள், மவுலானாக்கள், பாதிரியார்கள், சீக்கிய பாடம் கூறும் பாட்டிகள் (Pathi) ஆகியோர் சுபேதார் அல்லது நைப்சுபேதார் என்ற பதவியில் பாது காப்புத் துறையால் அமர்த்தப்படு கின்றனர். இவர்களுக்கு போர் வீரருக்கானப் பயிற்சி அளிக்கப்பட் டாலும், அவர்களது முழுநேரப் பணியே மதச்சடங்குகளாக இருக் கும். இவர்களுக்கு மற்ற வீரர் களைபோல் சீருடையும் உண்டு.
எந்த மதத்தின் பண்டிகையானாலும் மற்ற மதத்தை சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வர். ஆயுத பூஜைக்கான அனுமதியை அந்த யூனிட்டின் தலைவராக முஸ்லிம் அதிகாரி இருந்தாலும் அவரிடம் கேட்கப்படுவது உண்டு. இதற்கு அவரும் அனுமதி அளிப்பார்.
ரெஜிமென்டுகளில் அவரவர் சார்ந்த மதத்திற்கு ஏற்ற புனித கோஷமிடும் வழக்கம் உள்ளது. சீக்கியர்கள் அதிகமுள்ள சீக்ரெஜி மென்டுகளில் ‘போலேசோநிஹால், சத்ஸ்ரீஅகால்’ எனவும், ஜாட் ரெஜி மென்டுகளில் ‘ஜெய்பகவான், ஜாட் பல்வான்’ எனவும் பெங்காலி உள் ளிட்ட வட கிழக்கினர் அதிமுள்ள குர்கா ரெஜிமென்டில் ‘ஜெய் பத்ர காளி’ என்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிரனைடியர்ஸில், ‘அல்லாஹுஅக்பர்’ எனவும் முழக்கம் இடுவது உண்டு.
தமிழர்கள் அதிகம் கொண்ட மதராஸ் ரெஜி மென்டில் ‘வீர மதராஸி குத்துடா கொல்லுடா’ என எந்த கடவுளையும் குறிப்பிடாமல் வீரமாக மட்டும் முழங்குகிறார்கள். ‘ஜெய் ராம்’ என்பதும் ஒரு ரெஜிமெண்டுக்கான முழக்கமாகவும் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த முழக்கங்கள் போருக்கு செல்லும்போதும், பரேடு சமயங்களிலும் உணர்ச்சிப் பூர்வமாக ஒலிக்கும்.
மேற்கண்ட மதச்சடங்குகள் நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ராணுவத்தில் இல்லை. அதேபோல நடத்தக்கூடாது என்ற விதிமுறையும் இல்லை. காலத் துக்கு ஏற்றபடி பொது மக்களிடையே செய்யப்படும் பல்வேறு புதிய சடங்குகளும் ராணுவத்தில் அவ்வப் போது அறிமுகமாவது வழக்கம். பிரான்ஸில் ரபேல் போர் விமானத் திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்து முறைப்படி மட்டும் பூஜை போட்டிருக்கிறார். அந்த விமானம், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான ரெஜிமெண்டை சேர்ந்ததும் இல்லை, எனவே, அனைத்து மதச் சடங்குகளின்படியும் வணங்கி யிருந்தால் அதன்மீது சர்ச்சை கிளம்பி இருக்காது என்பது ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் கருத்தாக உள்ளது. ராஜ்நாத் இதை வெளி நாட்டில் செய்திருக்க வேண்டிய தேவையில்லை என்பதும் அவர் கள் எண்ணமாக உள்ளது.