

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் பாஜக அமைச்சர் பபன்ராவ் லோனிகர், தான் வெற்றி பெறுவதில் சிக்கல் எதுவும் இல்லை ஏனெனில் ஏற்கெனவே பணம் விநியோகிக்கப்பட்டு விட்டது என்று கூறியது வீடியோவில் வெளியாக பரபரப்பானது.
ஆனால் மறுக்கும் பாஜகவோ அந்த வீடியோவின் ஆடியோ உள்ளிட்டவைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று கூறிவருகிறது, காங்கிரஸ் கட்சி லோனிகர் தகுதியிழப்புச் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
நீர் விநியோக அமைச்சரான லோனிக்கர் தேர்தலில் ஜல்னா மாவட்டத்தின் பார்ட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜல்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெறுவதில் சிக்கல் இல்லை தான் ஏற்கெனவே பணப்பட்டுவாடா செய்து விட்டதாகக் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது என்று காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ரத்னாகர் மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாஜக குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை முதலில் தீர ஆராய வேண்டும் என்று கூறிவருகிறது.