

பிஹாரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, நேற்று பாட்னாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு காரில் புறப்பட தயாரானபோது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அமைச்சர் சவுபே மீது மையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவரான நிஷாந்த் ஜா என் பவர் பின்னர் உள்ளூர் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் முன்னாள் எம்.பி. பப்பு யாத வின் ஜன் அதிகார் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் டெங்கு காய்ச் சலை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அமைச்சர் மீது மை வீசியதாகத் தெரிவித்தார். ஆனால், மை வீசியவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று பப்பு யாதவ் தெரிவித்துள்ளார்.