வறட்சி, தண்ணீர், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்: மகாராஷ்டிர தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை

வறட்சி, தண்ணீர், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்: மகாராஷ்டிர தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை
Updated on
1 min read


மும்பை
வறட்சி, தண்ணீர், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிர தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை மும்பையில் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

வறட்சி, தண்ணீர், வேலைவாய்ப்பு இது தான் எங்கள் தேர்தல் அறிக்கையின் தாரகமந்திரம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக பதவியேற்கும் முன்பாக மிகமோசமான ஊழல் மிகுந்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது.

பட்னவிஸ் பதவியேற்ற பிறகு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது.முழுநேர முதல்வர் இப்போது தான் செயல்படுகிறார். கொங்கன் பகுதியில் இருந்து 167 டிஎம்சி தண்ணீரை மரத்வாடா மறறும் விதர்பா பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’’ எனக் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

*மகாராஷ்டிராவில் 5 லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்புகளுக்காக முதலீடு செய்யப்படும்.

*30 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.

*உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

*வறட்சி நிலவும் விதர்பா பகுதியில் 11 தடுப்பணைகள் கட்டப்படும்.

*தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படும்.

*சூரிய ஒளி மின்உற்பத்திக்காக சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.

*ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in