`ஓவர்டேக் செய்ததால் ஆத்திரம்: லாரியில் இருந்து எருமைகளை அவிழ்த்துவிட்ட சமாஜ்வாதி எம்எல்ஏ

`ஓவர்டேக் செய்ததால் ஆத்திரம்: லாரியில் இருந்து எருமைகளை அவிழ்த்துவிட்ட சமாஜ்வாதி எம்எல்ஏ
Updated on
1 min read

தனது காரை ஓவர்டேக் செய்து முந்திச் சென்ற லாரியில் இருந்த எருமைகளை எல்லாம் நடுரோட் டில் அவிழ்த்துவிட்டார் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வர் ராஜ்குமார் யாதவ். உத்தரப் பிரதேச மாநிலம் சாதர் தொகுதி யின் எம்.எல்.ஏ. ஆவார். இவர் ராஜஸ்தானில் இருந்து தனது தொகுதிக்கு தன்னுடைய காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரின் பின்னே எருமைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துகொண் டிருந்தது. அந்த லாரி எம்.எல்.ஏ. வின் காரை ஓவர்டேக் செய்து முன்னால் சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., அந்த லாரியை விரட்டிப் பிடித்து, அதிலிருந்து சுமார் 30 எருமைகளை நடுரோட்டில் அவிழ்த்துவிட்டார். இந்த எருமை களை அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு ஓட்டிச் சென்றனர்.

இதுகுறித்து அந்த எருமை களின் உரிமையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவலர்கள் அப்பகுதியில் இருந்த அனை வரின் வீடுகளுக்கும் சென்று அவர்கள் வைத்திருந்த எருமை களை மீட்டு உரிமையாளர் களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, காவல்நிலை யத்தில், அந்த எருமைகள் எல்லாம் இறைச்சிக் கூடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக ராஜ் குமார் யாதவ் புகார் அளித்தார். ஆனால் இதனை மறுத்த எருமை உரிமையாளர்கள், அவை அருகில் இருக்கும் பால் பண்ணைக்கு சட்டப்பூர்வமாகக் கொண்டு செல்லப்படுகின்றன, இதில் எதுவும் விதி மீறல் இல்லை என்று கூறினர்.

பின்னர், அந்த எருமை உரிமை யாளர்கள், எம்.எல்.ஏ.,வுடன் சமரசம் செய்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in