

புதுடெல்லி
பாஜகவின் புதிய தலைவர் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படுவார் என தற்போதைய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகை சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக தொடர்ந்து அமித் ஷா கட்டுப்பாட்டில் இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
காங்கிரஸ் போன்ற கட்சியல்ல பாஜக. ஒருவர் பின்னணியில் இருந்து மற்றொருவர் இயக்குவது பாஜக பழக்கத்தில் இல்லை. ஒருவருக்கு ஒரு பதவி என்பதை பாஜக நீண்டகாலமாக பின்பற்றி வருகிறது.
இதில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் அமைப்பு தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. மாநில தலைவர்கள் தேர்வாகி வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பரில் கட்சியின் புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.