Published : 14 Oct 2019 05:29 PM
Last Updated : 14 Oct 2019 05:29 PM

‘‘மேலும் ஒரு பெங்காலி பெருமை சேர்த்துள்ளார்’’ - அபிஜித் பானர்ஜிக்கு மம்தா வாழ்த்து

கொல்கத்தா,

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அபிஜித் பானர்ஜி ஓர் அமெரிக்கவாழ் இந்தியர் ஆவார். பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் பொருளாதார ஆய்வாளரான மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து மதிப்புமிக்க இந்த விருதை அவர் வென்றுள்ளார். உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் முகர்ஜி நோபல் பரிசு வென்றது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா கூறியுள்ளதாவது:

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள, கொல்கத்தாவின் சவுத் பாயிண்ட் பள்ளி மற்றும் பிரசிடென்சி கல்லூரியின் பழைய மாணவரான அபிஜித் பானர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டிற்கு மற்றொரு பெங்காலி பெருமை சேர்த்துள்ளார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,

இவ்வாறு மம்தா பானர்ஜி தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சவுத் பாயிண்ட் பள்ளி மற்றும் கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் 1981 இல் பொருளாதாரத்தில் பிஎஸ்சி பட்டம் முடித்தார். 1988 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பெற்றார்.

58 வயதான பானர்ஜி தற்போது மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் ஃபோர்டு அறக்கட்டளையின் சர்வதேச பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x