Published : 14 Oct 2019 04:43 PM
Last Updated : 14 Oct 2019 04:43 PM

70 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செல்போன் இணைப்பு: மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் துண்டிக்கப்பட்டிருந்த செல்போன் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் 70 நாட்களுக்குப் பிறகு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து நெட்வொர்க் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகள் ஆகஸ்ட் 5 அன்று நிறுத்தி வைக்கப்பட்டன.

காஷ்மீரில் மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்பு அளிக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு செல்போன் மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்ட பின்னர் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சி பரவியுள்ளது.

உள்ளூர்வாசிகள் தங்களது அன்பானவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மொபைல் போன்கள் இல்லாமல் தனிமையின் உணர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

உள்ளூர்வாசியான ஃபாரூக் அகமது ஏன்என்ஐயிடம் கூறியதாவது:

''தொலைபேசி சேவைகள் மீண்டும் செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது, நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசலாம். கடந்த 70 நாட்களாக எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன.

எனது சகோதரர்கள் காஷ்மீருக்கு வெளியே இருந்ததால் அவர்களுடன் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மொபைல் போன்கள் இல்லாமல், எங்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது'' என்றார்.

இதேபோன்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட எதிரொலிக்கும் மற்றொருவர், ''மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் இப்பகுதியில் தொடர்ந்து செயல்படும் என்று நம்புகிறேன்.'' என்றார்.

மத்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்ததுடன், முன்னாள் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக (யூ.டி.) பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேச நிர்வாக அமைப்புகள் வரும் அக்டோபர் 31 லிருந்து செயல்படத் தொடங்கும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x