Published : 14 Oct 2019 09:36 AM
Last Updated : 14 Oct 2019 09:36 AM

ஹரியாணா விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் - பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

ஜே.பி. நட்டா

சண்டிகர்

ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டி யில்லா கடன் வழங்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமை யிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதி களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், பாஜகவை ஆட் சியை விட்டு அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேசமயத்தில், ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவும் இரவு - பகலாக களப் பணியாற்றி வருகிறது.

இவை தவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சி களும் தனித்தனியே போட்டியிடு வதால் ஹரியாணாவில் பல முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பாஜக சார்பி லான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட் டத்தில் இந்த தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:

ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தின ருக்கு ரூ.3 லட்சம் வரையிலான வங்கிக் கடன், எவ்வித உத்தரவாத மும் (செக்யூரிட்டி) இல்லாமல் வழங்கப்படும்.

அதேபோல், ஹரியாணாவில் உள்ள விவசாயிகளுக்கு வட்டி ஏதும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரையில் பயிர்க்கடன் வழங்கப் படும்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக ஹரியாணா அறிவிக் கப்படும்.

மாநிலத்தில் உள்ள 25 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.500 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். ஹரியாணா முழுவதும் 1,000 விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில், மாநிலம் முழுவதும் 2,000 சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x