கேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய விட்டீர்கள்? - பிரகாஷ்ராஜ் கேள்வி

கேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய விட்டீர்கள்? - பிரகாஷ்ராஜ் கேள்வி
Updated on
1 min read

ஏன் ஒரு கேமராமேன் மட்டும் பின் தொடர அவரை தனியாகச் சுத்தம் செய்ய விட்டீர்கள் என்று மோடி கடற்கரையைச் சுத்தம் செய்தது தொடர்பாக பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று (அக்டோபர் 12) காலை கோவளத்தில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் பிரதமர் மோடி. அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைச் சுத்தம் செய்தார்.

பிரதமர் மோடி கடற்கரையைச் சுத்தம் செய்த வீடியோ, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்தது மட்டுமன்றி, கையில் எவ்வித உறையும் போடாமல் இதைச் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பிரமதர் மோடியின் செயலுக்கு பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தச் செயல் தொடர்பாக பா.ஜ. கட்சியினரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில், "எங்கு நமது தலைவர்களின் பாதுகாப்பு இருக்கிறது? ஏன் ஒரு கேமராமேன் மட்டும் பின் தொடர அவரை தனியாகச் சுத்தம் செய்ய விட்டீர்கள்? ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி இருக்கும் போது எப்படிச் சம்பந்தப்பட்ட துறையின் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யாமல் விடலாம்?" என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in