Published : 13 Oct 2019 11:25 AM
Last Updated : 13 Oct 2019 11:25 AM

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி: 100 போலீஸாரின் தேடுதலில் 24 மணிநேரத்தில் ஒருவர் கைது, பொருட்கள் மீட்பு

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளிடம் டெல்லியில் ரூ.50 ஆயிரம் பணம், இரு செல்போன்களை பறித்துச் சென்ற இருவரில் ஒருவரை 24 மணிநேரத்தில் கைது செய்து பொருட்களை மீட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி. இவரின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று சென்றார்.

வடக்கு டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்து இருந்தார். இதற்காக பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்து அங்கு ஆட்டோவில் சென்றார். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் தமயந்தி பென் மோடி ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி உள்ளார்.

அப்போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் தமயந்தி பென்னிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அந்த கைப்பையில் ரூ.56 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன், டெபிட் கார்ட் உள்ளிட்டவை இருந்தன.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தமயந்தி பென் உடனடியாக புகார் கொடுத்தார். அந்த சம்பவம் நடந்த பகுதியில்தான் டெல்லி கவர்னர் மற்றும் முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன.

வி.ஐ.பி.க்கள் நிறைந்த பகுதியில் மற்றும் பிரதமர் மோடியின் உறவினரிடமே வழிப்பறி சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமயந்தி பென் மோடியின் புகாரையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க 20 குழுக்களைக் கொண்ட போலீஸார் களமிறங்கி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் தமயந்தி பென் மோடி பயணம் செய்த ஆட்டோவை அந்த இரு நபர்களும் 15 நிமிடங்களாக பின்தொடர்ந்தது தெரியவந்தது. அந்த இரு நபர்களையும் போலீஸார் கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டுபிடித்தனர்,

அதில் ஒருவரை மட்டும் போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் நோனு என்பதும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும், இரு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

, பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x