கேரள கன்னியாஸ்திரி மரியம் இன்று புனிதராக அறிவிக்கப்படுகிறார்

கேரள கன்னியாஸ்திரி மரியம் இன்று புனிதராக அறிவிக்கப்படுகிறார்
Updated on
1 min read

திருவனந்தபுரம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டம், புத்தென்சிராவை சேர்ந்தவர் மரியம் திரேசியா. கடந்த 1876 ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டிய அவர் கடந்த 1914-ம் ஆண்டில் புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க் கையைத் தொடங்கினார்.

மதம் சார்ந்த பணிகள் மட்டு மன்றி சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டினார். கேரளாவில் பெண் கல்விக்காக அதிகம் பாடுபட்டார். 2 பள்ளிகள், 3 கான்வென்ட்டுகள், ஓர் ஆதரவற்ற இல்லத்தைத் தொடங்கினார். கடந்த 1926 ஜூன் 8-ம் தேதி தனது 50-வது வயதில் மரியம் திரேசியா உயிரிழந்தார்.

கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க அவரது மரணத்துக்குப் பிறகு 2 அதிசயங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதன்படி இருவரின் நோய் தீர்த்து மரியம் திரேசியா அதிசயம் நிகழ்த்தினார். இதனை போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற் றுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து வாடிகனில் இன்று நடைபெறும் விழாவில் மரியம் திரேசியாவை புனிதராக போப் அறிவிக்க உள்ளார். இந்த விழாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் முரளிதரன் தலைமை யிலான இந்திய குழு பங்கேற்கிறது.

கடந்த மாதம் ஒலிபரப்பான ‘மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி யில் கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். இந்தியா மட்டுமன்றி உலகத் தலைவர்கள் பலரும் மறைந்த கேரள கன்னியாஸ்திரிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in