

லலித் மோடி விவகாரத்தில் தொடர்பிருக்கும் காரணத்தால், வசுந்தரா ராஜேவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி, மாநில ஆளுநர் கல்யாண் சிங்கிடம் மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வசுந்தரா ராஜே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது லலித் மோடிக்கு ஆதரவாக அவர் சாட்சி யம் அளித்தார்.
ஒரு எம்எல்ஏ.வாக இருந்து கொண்டு, இந்த நாட்டு சட்டத்தை மீறிய ஒருவருக்கு, எழுத்துப்பூர்வ மான சாட்சியம் அளித்திருக்கிறார். இது கிரிமினல் குற்றம்.
இதன் காரணமாக அவர் முதல்வர் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியிழக்கிறார்.
இதுதொடர்பாக மனு ஒன்றை ஆளுநரிடம் கொடுத் துள்ளோம். இந்த விஷயத்தில் இதுதொடர்பாக அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.