

ஜம்மு
ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ரன்பீர் சிங், ஸ்ரீநகரில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதலாக, இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இதற்காக, தங்கள் நாட்டில் பயற்சி பெற்ற 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை காஷ்மீர் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
அவர்கள் அனைவரும் பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக் கின்றனர். இதனால், காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் ராணு வத்தினர் இரவு - பகலாக கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள நமது ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். எனவே, இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா உறுதியாக முறியடிக் கும். இவ்வாறு ரன்பீர் சிங் தெரிவித்தார்.