Published : 11 Oct 2019 01:58 PM
Last Updated : 11 Oct 2019 01:58 PM

வழிபாட்டில் எந்தத் தவறும் இல்லை; வேறுமத பாணியில் நடந்திருந்தாலும் தடுத்திருக்க மாட்டேன்: ரஃபேல் பூஜை குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி

ரஃபேல் போர் விமானத்தை பூஜை செய்து பெற்றதில் தவறில்லை என்றும் வேறு எந்த மத பாணியில் அன்று பூஜை நடந்திருந்தாலும் தடுத்திருக்க மாட்டேன் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து கடந்த விஜயதசமி அன்று முதல் ரஃபேல் விமானம் பெறப்பட்டது. அப்போது, ரஃபேல் போர் விமானத்துக்கு எலுமிச்சை வைத்தும், குங்குமத்தில் ஓம் என்று எழுதியும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் அது குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் கூறியதாவது:

நான் மேற்கொண்ட வழிபாட்டில் எந்தத் தவறும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதுவும் சொல்லலாம். ஆனால் நான் எனக்கு எது சரி என்றுபட்டதோ அதையே செய்கிறேன்.

அதையே இனியும் செய்வேன். எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் அபாரசக்தி இருக்கிறது என்பது சிறுவயது முதல் நான் கொண்ட நம்பிக்கை. அதன்படியே நடந்தேன்.

அதேபோல் பிரார்த்தனை செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒருவேளை இந்த பூஜை வேறு எந்த மதத்தின் நம்பிக்கையின்படி நடந்திருந்தாலும் நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த சர்ச்சை மீது மாறுபட்ட கருத்து இருக்கும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்குள் 7 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x