Published : 11 Oct 2019 12:57 PM
Last Updated : 11 Oct 2019 12:57 PM

ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொலை: மம்தா அரசுக்கு கண்டனம்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரும் உள்ளூர் வாசிகள் | படம்: ஏஎன்ஐ

மூர்ஷிதாபாத்

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் கைது செய்ய வில்லையெனில் போரட்டத்தில் இறங்கப்போவதாக அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மகன் ஆகியவர்களோடு சேர்த்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்படாவிட்டால் போராட்டம் நடத்துவதாக உள்ளூர்வாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்தவர் குடும்பத்தின் பகுதியில் வசிக்கும் ஒருவரான மனோஜ் சர்க்கார் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு 72 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யாவிட்டால், நாங்கள் ஒரு போராட்டத்தைத் தொடங்குவோம் ''

இறந்த குடும்பத்தின் அண்டை வீட்டாரான சர்க்கார், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.

கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் மம்தா அரசை விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x