Published : 11 Oct 2019 11:57 AM
Last Updated : 11 Oct 2019 11:57 AM

ஒடிசாவில் பக்தர்களின் தலையில் கால்வைத்து ஆசீர்வதிக்கும் பூசாரி

பான்பூர் (ஒடிசா),

ஒடிசா மாநிலத்தில் பக்தர்களின் தலையில் கால்வைத்து பூசாரி ஆசீர்வாதம் வழங்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டு செய்தியில் கூறியுள்ளதாவது:

கோர்தா மாவட்டம், பான்பூர் பகுதியில் வாகன நிறுவனம் ஒன்று சில தினங்களுக்கு முன் தசரா பண்டிகையைக் கொண்டாடியது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பூசாரியின் காலில் தங்கள் தலையைக் கொடுத்து ஆசிர்வாதம் பெற்ற காட்சி வீடியோவாகி பதிவாதி சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

வாகனங்களின் ஊழியர்கள் தங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திற்கு முன்பாக உள்ள தரையில் வரிசையில் அமர்ந்துள்ளனர், அருகே மந்திரங்களின் துதிப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே பூசாரி ஒவ்வொருவரின் தலைமீதும் கால் வைத்து ஆசிர்வாதம் செய்கிறார்.

ஆசீர்வாதம் வாங்குவதற்கு மிகவும் சிரம் தாழ்ந்து தங்கள் தலைகளை அவரது கால்களைத் தொடும்விதமாக குனிந்து கழுத்தை வளைக்கின்றனர். பூசாரி தனது காலின் முழுபாதத்தையும் பக்தர்களின் தலையில் வைத்த பிறகு தனது கையிலிருந்து பூக்களை அவர்கள் மீது போட்டு ஆசிர்வதிக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ''ஓர் இந்து பூசாரி பாரம்பரியமாக செயல்பட்டுள்ளார்'' எனப் பலரும் ஆதரித்தனர், மேலும் பலர் ''இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என எதிர்த்தனர். இக்காட்சிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் வந்ததால் பலத்த சர்ச்சையை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில் பூசாரி ஆர் சமந்திரேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இதை தவறாக பேசுபவர்களுக்கு, இந்த வழிபாடு பற்றி தெரியாது. அவர்கள் அதை வேறு வழியில் திசைதிருப்ப விரும்புகிறார்கள். ஆனால் இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x