பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகைப்பதிவு கொண்ட பொறியியல் மாணவர்கள் தேர்வெழுத அனுமதி: மத்திய அரசின் புதிய திட்டம்

பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகைப்பதிவு கொண்ட பொறியியல் மாணவர்கள் தேர்வெழுத அனுமதி: மத்திய அரசின் புதிய திட்டம்
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகைப்பதிவு கொண்ட மாணவர்களை தேர்வு எழுத அனு மதிக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தொழில் கல்வி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இறுதித் தேர்வை எழுத குறிப்பிட்ட வருகைப்பதிவு அவசியமாகும். இந்த நிலையை மாற்றி குறைந்தபட்ச வருகைப் பதிவு இல்லாத மாணவர்களையும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்க உள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுப்ப உள்ளது. நாட்டின் அனைத்து பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நிர்வகித்து வரும் ஏஐசிடிஇ இதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, கல்விக் காலங்களில் தொழில் முனை வோராக விரும்புவோர், ‘ஸ்டார்ட் அப்’ தொழிலுக்கு முயல்வோர், புதிய தொழிலுக்கான ஆய்வு செய்வோர் போன்ற மாணவர்கள் குறைந்த அளவு வருகைப்பதிவு வைத்திருந்தாலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால், கல்விக்கு பின் மாண வர்கள் வேலை தேடுபவர்கள் என்ற நிலை மாறி, வேலை அளிப்பவர்கள் என்றாகி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங் கள் கூறும்போது, ‘கல்வி பயிலும் போதே தொழிலில் முனைப்பு காட்டும் மாணவர்களுக்காக இந்த திட்டம் அமலாக்கப்பட உள்ளது. இதற்காக பேராசிரியர்கள் குழு அமைத்து நாட்டின் தொழில் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இது ஒரு பருவம் அல்லது ஒரு வருடம் எனக் கூட இருக்கலாம். இந்த இடைவெளியில் மாணவர்கள் தம் தொழிலில் கவனம் செலுத்திய பின் தன் கல்வியை தொடரலாம்’ எனத் தெரிவித்தன.

இதுபோன்ற தொழில் முனை வோர் மாணவர்களுக்காக தேர்வு களில் கூடுதல் மதிப்பெண் வழங்க வும் வகை செய்யப்பட உள்ளது. இதுபோன்ற தொழில் வளர்ப்புக் கான சூழலை பொறியியல் கல்வி நிறுவனங்கள் தம் வளாகத்திலேயே ஏற்படுத்தியும் தரலாம் எனவும் ஏஐசிடிஇ கூறுகிறது. இதில் தரமான மாணவர்கள் தொழில் துவங்க தேவையான நிதியை பெற அவர்களின் கல்வி நிறுவனங்களும் உதவலாம் எனவும், வெளியில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் பேசியும் அந்த மாணவர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அந்த அரசு அமைப்பு பரிந்துரைக்க உள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய முடிவு, உயர்கல்வி ஆய்வுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் தகவல் கடந்த வாரம் வெளியானதை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் கடந்தவாரம் தனது அதிகாரிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆய்வு செய்திருந்தார். இதில், ஏஐசிடிஇ சார்பில் அளிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, மாணவர்களுக் காக அமைச்சகம் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு தேசிய அளவில் அளித்த புதிய கண்டுபிடிப்புகளில் 70 சிறந்த மாணவர்கள் அரசால் அங் கீகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற் போதைய புதிய முடிவினாலும் மாணவர்கள் இடையே இருக்கும் தொழில் திறன் வளர்வதுடன் அவர்கள் உகந்த கல்விக்கான பட்டங்களையும் தவறாமல் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in